ஜாதகம் ஜோதிடம் 1

ஜாதகம் ஜோதிடம் ஆகியவற்றை தீவிரமாக நம்பிக்கொண்டு, அதனை நம் முன்னோர்கள் அறிவியல் ஞானத்துடன் கணித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்...உண்மையில் ஜோதிடத்திற்கும் அறிவியலுக்கும் என்ன இணைப்பு ...நிச்சயமாக ஒன்றுமில்லை...

அறிவியலுடன் நம்  அசட்டு நம்பிக்கைகளை பொருத்திப் பார்த்தாலன்றி நாம் தெளிவுற முடியாது..இவை எல்லாம்  புரிந்தாலும் புரியாமல் இருப்பது போல இருப்பவர்களும் உண்டு. அனால் இந்த கட்டுக்கதைகளுக்கு அறிவியல் என்று பெயர் சூட்டாமல் இருத்தலே போதுமானது..

ஜோதிட சாத்திரப்படி ஒன்பது  கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி, சுக்கிரன், குரு, ராகு, கேது.
அறிவியல் படி ஒன்பது கிரகங்கள் : புதன் (mercury), வெள்ளி (venus), புவி (earth), செவ்வாய் (mars), வியாழன் (jupiter), சனி (saturn), யுரேனஸ்(uranus), நெப்டியூன்(neptune), புளூட்டோ(pluto).

இந்த முதல் கட்டத்திலேயே ஜோதிடம் அறிவியல் ஆகாது என்பது திண்ணம்...காரணம்..
சூரியன் ஒரு கிரகம் அல்ல.சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் (Star)..சந்திரன் என்பது ஒரு கோள்(satellite)..அதாவது இயற்கையான கோள்(natural satellite).
இரண்டாவதாக தினமும் காலையில் தொலைக்காட்சிகளில் நம் கிரகங்களை செவ்வாய் அங்கு இருக்கிறது..சனி இங்கு இருக்கிறது என்று தும்பா விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் என்று நினைத்துக்கொண்டு கிரகங்களை வைத்து (நம் சூழ்நிலைகளையும்) வைத்துக்கொண்டு பலர் காமெடி செய்கின்றனர்....உண்மையில் கிரகங்கள் சுழலும்..சூரியனை சுற்றிக்கொண்டு அவற்றின் நீள்வட்ட பாதையில் (elliptical orbit) அன்றாடம் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன...அனால் அவைகள் எந்த தனி மனிதனுக்காகவும் தனித்தனியாக சுற்றுவதில்லை...அவை இயற்கையாகவே சுற்றிக்கொண்டு இருக்கின்ற இயற்கையான இயற்பியல் விதி (விதி என்றால் fate இல்லை , physics law).

(http://spacenewstamil.com/space-news-tamil/light-year-in-tamil)
ஒரு பொருள் நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டும் போதாது. அதற்கு வெளிச்சமும் தேவை. அப்பொழுதுதான் நாம் பார்க்கும் பொருள் நம் கண்களுக்குத் தெரியும். ஒளியை மையமாக வைத்துதான் நட்சத்திரங்கள் கிரகங்கள் இடையே ஆன தூரத்தை கணக்கிடுகின்றனர். அதற்கான அலகு (unit ) தான் "ஒளி ஆண்டு" (light year ) என்று அழைக்கிறோம்.
சூரியன் நெருப்புக் கோளமாக இருப்பதால் அதிலிருந்து வெளிப்படும் ஒளி கோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு பரவி விரிகிறது
சுமாராக ஒளி ஒரு வினாடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கின்றது..
இதன் படி, ஒரு நிமிடத்தில் ஒளி 3,00,000*60= 1,80,00,000 கி.மீ தூரத்தைக் கடக்கின்றது.

சூரியக் குடும்பத்தில்(in solar system)..சூரியனிலிருந்து ஒவ்வொரு கிரகங்களும் பல கோடிக்கணக்கான ஓளியாண்டு தொலைவில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.

நம் ஜோதிட சாத்திரப்படி பார்த்தால்... தினமும் நம் ஒவ்வொருவருக்கும் அனைத்து கிரகங்களும் இடம் மாறிக்கொண்டு இருக்கும் என்றால் அது இயல்பிலேயே சாத்தியம் இல்லாமல் போகின்றது அல்லவா...எனவே, ஜோதிடம் உண்மையாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தனி மனிதனின் தலைக்கு மேலேயும் ஒரு தனிப்பட்ட சூரியக் குடும்பம் இருக்க வேண்டும்.

தங்க லீலா.

Comments