Posts

ஜாதகம் ஜோதிடம் 1

ஜாதகம் ஜோதிடம் ஆகியவற்றை தீவிரமாக நம்பிக்கொண்டு, அதனை நம் முன்னோர்கள் அறிவியல் ஞானத்துடன் கணித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்...உண்மையில் ஜோதிடத்திற்கும் அறிவியலுக்கும் என்ன இணைப்பு ...நிச்சயமாக ஒன்றுமில்லை... அறிவியலுடன் நம்  அசட்டு நம்பிக்கைகளை பொருத்திப் பார்த்தாலன்றி நாம் தெளிவுற முடியாது..இவை எல்லாம்  புரிந்தாலும் புரியாமல் இருப்பது போல இருப்பவர்களும் உண்டு. அனால் இந்த கட்டுக்கதைகளுக்கு அறிவியல் என்று பெயர் சூட்டாமல் இருத்தலே போதுமானது.. ஜோதிட சாத்திரப்படி ஒன்பது  கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி, சுக்கிரன், குரு, ராகு, கேது. அறிவியல் படி ஒன்பது கிரகங்கள் : புதன் (mercury), வெள்ளி (venus), புவி (earth), செவ்வாய் (mars), வியாழன் (jupiter), சனி (saturn), யுரேனஸ்(uranus), நெப்டியூன்(neptune), புளூட்டோ(pluto). இந்த முதல் கட்டத்திலேயே ஜோதிடம் அறிவியல் ஆகாது என்பது திண்ணம்...காரணம்.. சூரியன் ஒரு கிரகம் அல்ல.சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் (Star)..சந்திரன் என்பது ஒரு கோள்(satellite)..அதாவது இயற்கையான கோள்(natural satellite). இரண்டாவதாக தினமும் காலையில்